ADDED : ஆக 31, 2026 01:09 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் திருச்சி ரோடு காந்திஜி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில், மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் தனியார் ஹோமியோபதி கிளினிக்கில் நடந்தது.
தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். செயலாளர் நாகக்குமார், நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஊராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை தினசரி கவனிக்க வலியுறுத்த வேண்டும். தெருவிளக்குகள் பராமரிப்பு பணிகள் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
