/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் குவிந்த பயணிகள் ஏரிச்சாலையில் நெரிசல்
/
'கொடை'யில் குவிந்த பயணிகள் ஏரிச்சாலையில் நெரிசல்
ADDED : டிச 22, 2024 02:38 AM

கொடைக்கானல்:கொடைக்கானலில் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறையை அடுத்து சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வந்தனர். இதைத்தொடர்ந்து ஏரிச் சாலையில் நெரிசல் ஏற்பட போக்குவரத்து பாதித்தது.
சில வாரங்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு நிலையால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை பெய்தது. கொடைக்கானலில் மழை ஓய்ந்த நிலையில் அவ்வப்போது தரை இறங்கும் மேகக்கூட்டம் என ரம்யமான சூழல் நிலவுகிறது. சில்லிடும் காற்றால் கடுங்குளிர் நிலவியது. குளு குளு நகரில் உள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக் , வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வன சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் ரசித்தனர். ஏரிச்சாலையில் குதிரை,சைக்கிள், ஏரியில் படகு சவாரி செய்தனர்.
தற்போது பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறையால் ஏராளமானோர் மலை நகரில் முகாமிட்டனர். நேற்றிரவு ஏரிச்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட அவதிப்பட்டனர்.