/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ராகுலை அவதுாறாக பேசியதாக எச்.ராஜா உட்பட 5 பேர் மீது காங்., புகார்
/
ராகுலை அவதுாறாக பேசியதாக எச்.ராஜா உட்பட 5 பேர் மீது காங்., புகார்
ராகுலை அவதுாறாக பேசியதாக எச்.ராஜா உட்பட 5 பேர் மீது காங்., புகார்
ராகுலை அவதுாறாக பேசியதாக எச்.ராஜா உட்பட 5 பேர் மீது காங்., புகார்
ADDED : செப் 24, 2024 05:16 AM
திண்டுக்கல்: காங்.,தலைவர் ராகுலை அவதுாறாக பேசியதாக பா.ஜ.,வை சேர்ந்த எச்.ராஜா உட்பட 5 பேர் மீது திண்டுக்கல் எஸ்.பி.,யிடம் காங்., சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகர காங்.,மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் திண்டுக்கல் எஸ்.பி.,யிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: உத்தரபிரதேசம் மாநில பா.ஜ., அமைச்சர் ரகுராஜ்சிங் ராகுலை நம்பர் ஒன் பயங்கரவாதி என அவமதிப்பாக பேசி உள்ளார். இது கலவரத்தை துாண்டும் வகையில் உள்ளது.
பா.ஜ.,வினர் ஜம்மு-காஷ்மீர், அரியானா மாநிலங்களில் நடக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு பொது அமைதியை கெடுக்க நினைக்கின்றனர். இதேபோல் பா.ஜ., தமிழக பொறுப்பாளர் எச்.ராஜா,பா.ஜ.,தலைவர்கள் தர்விந்தர் சிங் மர்வா,மஹாராஷ்டிரா எம்.எல்.ஏ.,சஞ்சய் கேக்வார்ட், ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் பிட் போன்றோரும் ராகுலை இழிவாக பேசுகின்றனர்.
அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.