ADDED : நவ 28, 2025 07:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -நத்தம்-கோவில்பட்டி துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அரசியல் அமைப்பு சாசன தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியை உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். ஆசிரியர் மகாலெட்சுமி முன்னிலை வகித்தார்.
இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் அரசியல் சாசனம் குறித்தும், குடிமக்களின் கடமைகள் குறித்தும் விழிப்புனர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதேபோல், உலுப்பகுடி அரசு உயர்நிலைபள்ளியிலும் அரசியல் சாசன உறுதிமொழி எடுக்கபட்டது.

