/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாணவர்களுக்கு ரூ.5.41 கோடி கல்விக்கடன்
/
மாணவர்களுக்கு ரூ.5.41 கோடி கல்விக்கடன்
ADDED : நவ 28, 2025 07:57 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் ஜி.டி.என்., கல்லுாரியில் நேற்று கல்விக்கடன் முகாம் நடந்தது.
கலெக்டர் சரவணன் தலைமை வகித்து கடன் வழங்கும் முகாமை துவக்கி வைத்தார். எம்.பி., சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார். 154 மாணவ, மாணவிகளுக்கு ரூ.5.41 மதிப்பீட்டிலான கல்வி கடனுதவி வழங்கப்பட்டது. கலெக்டர் சரவணன் பேசுகையில், இந்த ஆண்டு 2 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.50 கோடி மதிப்பில் கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 881 மாணவர்களுக்கு ரூ.26.92 கோடி மதிப்பில் கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் www.vidyalakshmi.co.in இணையதளம் மூலம் விண்ணப்பித்து கல்விக்கடன் பெற்று பயனடையலாம்.

