ADDED : ஜூலை 28, 2026 02:34 AM

தாண்டிக்குடி: தாண்டிக்குடி-வத்தலக்குண்டு ரோட்டில் கட்டுமான பொருட்கள் குவிக்கும் நிலை நீடிப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
தாண்டிக்குடி கே.சி.பட்டி, ஆடலுார், பெரியூர், பாச்சலுார், தடியன்குடிசை மங்களம்கொம்பு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய ரோடாக உள்ளது.
சமீபமாக இந்த ரோட்டில் கட்டுமான பொருட்கள், கட்டுமான இடிபாடுகள் குவிக்கப்பட்டு உள்ளன.
இதனால் போக்கு வரத்திற்கு இடையூறும், விபத்து அபாயமும் நிலவுகிறது. குறிப்பாக கொங்கப்பட்டி அருகே குறுகலான ரோட்டில் குவிந்துள்ள இடிபாடுகள் குறித்து வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
மலை ரோட்டில் நடக்கும் வளர்ச்சி பணிகளுக்கான தளவாட பொருட்களும் இதுபோன்று குறுகலான பகுதியில் குவித்துள்ளதால் நாள்தோறும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
இதனை நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்ளாத நிலையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
