/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 28, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் அனைவருக்கும் வேட்டி, சேலை, பொங்கல் தொகுப்புடன் ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும்.
வீடு கட்டும் மானியத் திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன் இந்திய கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பாலசந்திர போஸ் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் மாவட்ட செயலர் பிரபாகரன், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் கணேசன் பங்கேற்றனர்.