நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி: ஆலத்துாரான்பட்டியில் மாவட்ட பார்க்கவ குல சுருதிமார் மூப்பனார் சமுதாய அறக்கட்டளை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். செயலாளர் ராமசுப்பிரமணியம், பொருளாளர் முத்தையா முன்னிலை வகித்தனர்.
கன்னிவாடி பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜி.கே.மூப்பனார் சிலை அமைக்க ஏற்பாடு செய்வது, 10, பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.