ADDED : ஆக 29, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார், ஆக.30
வேடசந்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு, ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செல்வகுமார் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில், மாணவர்களிடம் ஆசிரியர்கள் நடந்து கொள்ளும் விதம், இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, அக்.,10ல் பள்ளி மேலாண்மை குழுவிற்கு உறுப்பினர்களை தேர்வு செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
நேர்முக உதவியாளர் சுரேஷ்பாபு, தலைமை ஆசிரியர்கள் வேடசந்துார் ஆண்கள் பள்ளி காசிநாதன், பெண்கள் பள்ளி கண்மணி, காசிபாளையம் பள்ளி லீலாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
