ADDED : ஆக 29, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
வடமதுரை, ஆக.30-
வடமதுரை ஒன்றியத்தில் செப்.,14ல் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக ஹிந்து மக்கள் கட்சியினர் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பொது இடங்களில் சிலைகள் அமைத்து வழிபாடு நடத்தப்பட உள்ளது. இதற்காக மதுரை பகுதியில் காகிதக்கூழால் தயாரிக்கப்பட்ட 1 முதல் 7 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் நேற்று வடமதுரை வந்தன.
மாவட்ட தலைவர் நாகராஜ் கூறுகையில், ‘செப்.,14ல் சிலைகள் பிரதிஷ்டை செய்து போலீசாரின் அனுமதி பெற்ற நாளில் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதில் மக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது’ என்றார்.
