/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டில் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி
/
ரோட்டில் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி
ADDED : ஆக 22, 2025 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் தனியார் கம்பெனியில் சேமியா மூடைகளை ஏற்றிய லாரி ஒன்று துாத்துக்குடி துறைமுகத்தை நோக்கி சென்றது. கோவையை சேர்ந்த லாரி டிரைவர் ஹரிஹரன் 23, ஓட்டி சென்றார்.
வேடசந்துார் திண்டுக்கல் ரோட்டில் லட்சுமணன்பட்டி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
டிரைவர் தப்பினார். ராட்சத கிரேன் மூலம் லாரியை மீட்டனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

