/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் தடை தொடர்கிறது
/
மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் தடை தொடர்கிறது
ADDED : ஏப் 11, 2025 05:34 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடைகள் ஏற்படுவதால் வெயிலின் தாக்கத்தில் இருக்கும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கோடை காலத்தில் மின்சார தேவை அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். மாவட்டத்தை பொறுத்தவரையில் மார்ச் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மின்தேவை அதிகரித்துள்ளது.
தண்ணீருக்கான மோட்டார் தொடங்கி மின்விசிறி, குளிர்சாதன உபகரணங்கள் வரை அதிகமாக பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் அறிவிக்கப்படாத திடீர் மின்தடை பல இடங்களில் ஏற்படுகிறது.
குறிப்பாக ஊரக பகுதிகளில் அதிகளவில் இந்த மின்தடை இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அறிவிக்கப்படாத மின்தடை ஒருபுறம் இருக்க இன்னொருபுறம் மின் அழுத்த குறைவால் வீடுகளில் உள்ள குளிரூட்டிகள், மின்விசிறி ஆகியவற்றை இயக்க முடியாமல் அவதிப்படுவதோடு அவை பழுதாகியும் விடுவதாக புகார் எழுகிறது. மின்தடை, மின் அழுத்த குறைவு காரணமாக மக்கள் துாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக முதியோரும், குழந்தைகளும் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். கோடைகாலம் முடியும் வரை மின்தடை ஏற்படாமல் இருக்க வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

