ADDED : ஜன 21, 2025 06:17 AM
இருளில் மலை கிராமங்கள்
தாண்டிக்குடி: தாண்டிக்குடி கீழ் மலைப்பகுதியில் தொடர் மின்தடையால் மலை கிராமங்கள் இருளில் மூழ்கின.
இரு தினங்களாக மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதையடுத்து மின்பாதைகளில் இடையூறு ஏற்பட்டு 50க்கு மேற்பட்ட மலை கிராமங்கள் விடிய, விடிய இருளில் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் சப்ளையில் பிரச்னை ஏற்படும் நிலையில் மாற்று சப்ளையாக வத்தலக்குண்டு, செம்பட்டி சப்ளையாக இருப்பது வழக்கம். இதிலும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக மின்வாரியத்தினர் தெரிவிக்கின்றனர். தாண்டிக்குடி, பண்ணைக்காடு மின் அலுவலகத்தில் காலி பணியிடங்கள் நிரப்பபடாததால் இடையூறுகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சாரல் மழைக்கே மின்தடை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம்தான் மலைப்பகுதியில் நீடிக்கும் மின் தடையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

