/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விடாது பெய்த தொடர் மழை இருள் சூழ்ந்த -திண்டுக்கல்
/
விடாது பெய்த தொடர் மழை இருள் சூழ்ந்த -திண்டுக்கல்
ADDED : டிச 13, 2024 04:51 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் நாள் முழுவதும் சூரிய ஓளியின்றி இருள் சூழ்ந்து காணப்பட்டது. சில இடங்களில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. -
மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் தொடங்கிய மழை இடைவிடாது இரவு வரை பெய்தது. காலை முதலே சூரிய வெளிச்சத்தை காணமுடியவில்லை. வீடுகள், அலுவலகங்களில் மின் விளக்குகளை எரியவிட்டப்படி அன்றாட பணிகளில் ஈடுபட்டனர்.
மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. கல்லுாரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என பலரும் நனைந்தபடியே பணிகளுக்கு சென்றனர். பெரும்பாலான மக்கள் வீட்டிற்குள் முடங்கினர். மழையுடன் பனியும் சேர்ந்து கொண்டதால் புறநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றனர்.பழநிக்கு வந்திருந்த ஐயப்ப பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். அணைகளுக்கு வரும் நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை 8 :00மணி நிலவரப்படி 53.80 மி.மீ., மழைய பதிவாகியிருந்தது. மழையால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் எஸ்.பி., அலுவலகம் எதிரே இருந்த புங்கை மரம் ரோட்டில் சாய்ந்தது. தீயணைப்பு,பேரிடர் மீட்பு குழுவினர் அப்புறப்படுத்தினர்.
ஒட்டன்சத்திரம் :ஒட்டன்சத்திரம் விவசாயி சின்னச்சாமி கூறுகையில், நேற்று பெய்த மழை விவசாயிகளுக்கு வரப் பிரசாதம் ஆகும், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றார்.

