ADDED : ஜன 22, 2026 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் நபர்களை பயன்படுத்தி ஒன்றியத்தில் ஒப்பந்தப் பணிகள் நடைபெற்றுள்ளன.
இதில் 20 ஒப்பந்ததாரர்கள் ஒன்றிய பகுதிகளில் பணி செய்துள்ளனர். அவர்கள் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, சாலைகள் அமைத்தல், சாக்கடை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை நிறைவு செய்து அதற்கான அரசு வழங்க வேண்டிய பணம் வழங்கப்படாமல் ஓராண்டு காலமாக நிலுவையில் இருப்பதாக கூறி ஒப்பந்ததாரர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

