/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள்
/
பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள்
ADDED : ஜன 22, 2026 05:46 AM

ஒட்டன்சத்திரம்: பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு எஸ்.பி., பிரதீப் ஒளிரும் குச்சிகளை வழங்கினார்.
பழநி முருகன் கோயிலில் நடக்கும் தைப்பூச விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக செல்கின்றனர்.
10 நாட்களுக்கு 20 ஆயிரம் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள், பட்டைகள், குடிநீர் பாட்டில்கள், பிஸ்கட், மாத்திரை, மருந்துகள் உள்ளிட்டவைகளை வழங்கும் நிகழ்ச்சியை எஸ்.பி., பிரதீப் துவக்கி வைத்தார். டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் தங்கராஜ், எஸ்.ஐ., கள் சிவராஜ், உமாமகேஸ்வரி, லியோனி ரஞ்சித்குமார், விக்னேஷ் குமார் கலந்து கொண்டனர்.

