/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கட்டுப்படுத்துங்க சார் எங்கும் திரியும் நோய் பாதித்த நாய்கள் கூட்டமாக அலைவதால் மக்கள் அச்சம்
/
கட்டுப்படுத்துங்க சார் எங்கும் திரியும் நோய் பாதித்த நாய்கள் கூட்டமாக அலைவதால் மக்கள் அச்சம்
கட்டுப்படுத்துங்க சார் எங்கும் திரியும் நோய் பாதித்த நாய்கள் கூட்டமாக அலைவதால் மக்கள் அச்சம்
கட்டுப்படுத்துங்க சார் எங்கும் திரியும் நோய் பாதித்த நாய்கள் கூட்டமாக அலைவதால் மக்கள் அச்சம்
ADDED : ஜன 09, 2024 05:46 AM

வத்தலக்குண்டு,: திண்டுக்கல் மாவட்டத்தில் நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பேரூராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் இந்தநாய்களுக்கு சிகிச்சை அளிக்கவும், குடும்பக் கட்டுப்பாடு செய்யவும் முன்வர வேண்டும் .
மாவட்டத்தில் சில ஆண்டுகளாக நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யாத காரணத்தால் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில நாய்கள் நோய் தாக்கம் அதிகரித்து வாயில் எச்சில் வழிந்து ஓடியும் உடல்களில் நிறைய புண்களை வைத்துக் கொண்டும் தெருக்களில் திரிகிறது.
ஆங்காங்கே கூட்டமாக நின்று மக்களை அச்சுறுத்தும் வண்ணம் குறைப்பதால் பெரும்பாலோர் அச்சத்துடன் தெருக்களில் நடமாட வேண்டியது உள்ளது. திறந்த வீடுகளுக்குள் புகுந்தும் உணவுகளை சாப்பிட்டு விடுகின்றன. மாடிப்படிகளில் ஏறி அசிங்கம் செய்து விடுவதால் பொதுமக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
தெரு நாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் தவறியதால் நாய்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்கு ப்ளூ கிராஸ் சொசைட்டியினர் தடையாக இருப்பதாக காரணம் கூறப்பட்டாலும் நாய்கள் அதிகரிப்பால் பொதுமக்களுக்கு சிரமங்கள் அதிகமாக உள்ளது. அதிலும் நோய் தாக்கம் ஏற்பட்ட நாய்களால் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டு வருகிறது. மாணவர்கள் குழந்தைகள் வெளியில் நடமாடுவதற்கு அச்சம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இரவில் ஊளையிட்டுக் கொண்டும், குறைத்துக் கொண்டே இருப்பதால் முதியோர்கள், குழந்தைகள் துாக்கமின்றி தவித்து வருகின்றனர்.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சிகளுக்கு போதிய அறிவுரை வழங்க வேண்டும்.
...........
கட்டுப்படுத்தலாமே
நோய்களால் தாக்கப்பட்டு திரியும் நாய்களால் அச்சம் ஏற்படுகிறது. வாகனங்களில் செல்ல முடியவில்லை. துரத்திக் கொண்டே வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகங்கள் தவறிவிட்டன. நாய்களை கட்டுப்படுத்த தடையாக உள்ள புளூ கிராஸ் நிர்வாகிகளிடம் சூழ்நிலையை விளக்கி இதற்கான தீர்வுகளை அவர்களிடமே கேட்டு கட்டுப்படுத்த வேண்டும்.
சுந்தர், ஆட்டோ டிரைவர், வத்தலக்குண்டு.