/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் கட்டுப்படுத்துங்க; ரோடு, தெருக்களில் அலறுவதால் பெரும் பாதிப்பு

ADDED : ஆக 23, 2025 05:27 AM

மாவட்டத்தில் அரசு ,தனியார் பஸ்கள், கனரக லாரிகள், 18 பேர் அமர்ந்து செல்லக்கூடிய டிராவல்ஸ் வாகனங்கள் என பெரும்பாலான வாகனங்களில் ஏர் ஹாரன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தொட்டால் அலறும் என்ற வகையில் ஒய்... ஒய்... என காதை பிளக்கும் வகையில் எலக்ட்ரிக்கல் ஹாரன்கள் வந்துவிட்டன. கூடுதலான ஒலி சத்தத்தால் நடந்து செல்வோர், டூவீலர்களில் செல்வோர் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகின்றனர்.
எல்லா ஹாரன்களுமே காற்று உள்ளே போகும்போதுதான் அலறல் ஏற்படும் என்றாலும், நவீன ஹாரன்களில் கட்டவுட் வைத்து ஏர் ஆல்டர் (காற்று மாற்றம்) செய்கிறார்கள்.
இதனால் சத்தம் காதை பிளக்கிறது. அவ்வப்போது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தினாலும் மீண்டும் அதே ஹாரன் சத்தம் ஒலிக்கிறது. இதனால் ரோடுகளில் செல்லும் பொதுமக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள கட்டடங்கள் மருத்துவ மனைகளில் இருப்போரும் ஹாரன் சத்தங்களால் அவதியுறுகின்றனர்.
இதன் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.