ADDED : டிச 08, 2024 06:08 AM
திண்டுக்கல் : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 19 வயதிற்குட்பட்ட கூச்பிஹார் கோப்பை 5வது சுற்று டெஸ்ட் போட்டி நத்தம் என்.பி.ஆர்., மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
டாஸ் வென்று முதல் இன்னிங்ைஸ தொடங்கிய ஹரியான அணி 135 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
தொடர்ந்து பேட்டிங் செய்த தமிழக அணி நேற்று முன்தினம் ஆட்ட நேர முடிவில் 61 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 2ம் நாளில் தனது இன்னிங்ைஸ தொடங்கிய தமிழக அணி 75.1 ஓவர்களில் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
நவின் 59, ராகவ் 33, பிரவீன் 38 ரன்கள் எடுத்தனர்.
பரம் சண்டிலா 5, கன்சிக் சவுகான் 4 என விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து 2வது இன்னிங்ைஸ தொடங்கிய ஹரியானா அணி ஆட்ட நேர முடிவில் 38 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்தது. கிேஷார் 28 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார்.