/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தத்தில் கூச்பிஹார் கோப்பை கிரிக்கெட் போட்டி
/
நத்தத்தில் கூச்பிஹார் கோப்பை கிரிக்கெட் போட்டி
ADDED : டிச 07, 2024 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 19 வயதிற்குட்பட்ட கூச்பிஹார் கோப்பை 5வது சுற்று டெஸ்ட் போட்டி நத்தம் என்.பி.ஆர் சர்வதேச மைதானத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹரியானா அணி 67.3 ஓவர்களில் 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழ்நாடு அணி சார்பாக பிரவீன் 3 விக்கெட்,கிஷோர் 5 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதன்பின் ஆடிய தமிழக அணி ஆட்ட நேர முடிவில் 26 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்திருந்தது. நவீன் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்திருந்தார்.