நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான நிலை நிலவியது.
திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
மக்கள் வீடுகளுக்குள் முடங்கி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 8:00 மணிக்கு மேல் பெய்ய தொடங்கிய மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. குளிர்ச்சியான நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். இதேபோல், ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 8:15 மணிக்கு பலத்த காற்று வீசியது. தொடர்ந்து இடி மின்னலுடன் கனமழை பெய்தது. பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.