/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கூட்டுறவு வங்கி செயலாளர் பணியின் போது உயிரிழப்பு
/
கூட்டுறவு வங்கி செயலாளர் பணியின் போது உயிரிழப்பு
ADDED : நவ 14, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்; வேடசந்துார் பணியாளர் சிக்கன நாணய கூட்டுறவு சங்க செயலாளராக இருப்பவர் விக்னேஸ்வரன் 54.
வடமதுரை வேல்வார் கோட்டையை சேர்ந்த இவர் இங்கு நீண்ட காலமாக பணியில் உள்ளார். நேற்று பணிக்கு வந்த இவர் கடைவீதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிக்கு வரவு செலவு சம்பந்தமாக சென்றுள்ளார்.
நேற்று மதியம் 1:30 மணிக்கு திடீரென மயங்கி விழுந்தார். வேடசந்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

