ADDED : மே 17, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.மாவட்டத் துணைத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலர் சாதிக் அலி முன்னிலை வகித்தார்.
காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டுறவு சங்க ஊழியர்கள் சொந்த ஊரில் பணியாற்ற தடைவிதிக்கப்பட்டுள்ள மாநில பதிவாளரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.