ADDED : செப் 18, 2026 12:40 AM

அ நிறம் | அளவு
நத்தம்: -நத்தம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் நேற்று நடந்தது.
விற்பனை கூட மேற்பார்வை யாளர் மாரிமுத்து தலைமை வகித்தார்.
தேங்காய் பருப்பின் தரத்திற்கேற்ப அதிகபட்சமாக கிலோ ரூ.154-க்கும் குறைந்த பட்சமாக ரூ.135-க்கும், தேங்காய் தொட்டி கிலோ அதிகபட்சமாக ரூ.34-க்கும் குறைந்த பட்சமாக ரூ.33-க்கும் ஏலம் போனது.
மொத்தம் 1730 கிலோ கொப்பரை தேங்காய் வரப்பெற்றதில் ரூ.2.20 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.
மேற்பார்வை யாளர் அங்காள ஈஸ்வரி, இளநிலை உதவியாளர் பால முருகன், மண்டி ஆய்வாளர் முத்துக் குமார், சுற்றுவட்டார கிராம விவசாயிகள், உள்ளூர், வெளி மாவட்ட வியாபாரிகள் பங்கேற்றனர்.
