ADDED : செப் 18, 2026 12:41 AM

அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் அருகே சிறுகுடியில் அடுத்த மாதம் கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்க உள்ளது. இதையொட்டி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் சிறுகுடியில் நடந்தது. தாசில்தார் டேனியல் பிரேம்குமார் தலைமை வகித்து மனுக்களை பெற்றார்.
இதில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், மகளிர் உரிமைத்தொகை, ஆக்கிரமிப்பு அகற்றம் என மொத்தம் 129 மனுக்கள் வரப்பெற்றன. ஆர்.ஐ.,க்கள், வி.ஏ.ஓ.,க்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
