ADDED : அக் 18, 2026 05:40 PM
அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது. வத்தலக்குண்டு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் பலர் பங்கேற்றனர். தேங்காய் பருப்பின் தரத்திற்கு ஏற்ப அதிகபட்சமாக கிலோ ரூ.143-க்கும் குறைந்தபட்சமாக கிலோ ரூ.134-க்கும் ஏலம் போனது. மொத்தம் 68 கிலோ கொப்பரை தேங்காய்கள் வரப்பெற்று ரூ.9 ஆயிரத்து 592-க்கு ஏலம் போனது.
ஏலத்தை மேற்பார்வையாளர் கீதா, இளநிலை உதவியாளர் கண்ணன் நடத்தினர். விவசாயிகள் தேங்காய் கொப்பரைகளை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வந்து விற்று லாபம் அடையலாம் என மேற்பார்வையாளர் தெரிவித்தார்.
