ADDED : பிப் 07, 2025 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பழநி ரோடு பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் மத்தியரசின் பட்ஜெட் நகலை கிழிக்கும் போராட்டம் நடந்தது.
எல்.பி.எப். மாவட்ட செயலாளர் அழகர்சாமி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் கணேசன், ஐ.என்.டி.யு.சி., உமாராணி, ஏ.ஐ.டி.யு.சி. சந்திரமோகன், ஏ.ஐ.சி.சி.டி.யு.,ரவி, எச்.எம்.எஸ்., சையது, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஜெயசீலன், பொருளாளர் தவக்குமார், நிர்வாகிகள் பாண்டியன், ராமநாதன், வெங்கிடுசாமி, பால்ராஜ், தனசாமி, அழகர்சாமி, பாலசந்திரபோஸ், சீனிவாசன் பங்கேற்றனர்.

