/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழைய கட்டடங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்
/
பழைய கட்டடங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்
ADDED : செப் 21, 2024 06:00 AM
திண்டுக்கல்: மதுரை சம்பவம் எதிரொலியாக திண்டுக்கல் நகரில் உள்ள பழைய கட்டடங்கள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
சில தினங்களுக்கு முன் மதுரையில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே கட்ராபாளையம் தெருவில் இயங்கிய பெண்கள் தங்கும் விடுதியில் பிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் அரசு பள்ளி ஆசிரியைகள் உட்பட 3 பேர் பலியானர்.
இதன் எதிரொலியாக திண்டுக்கல் நத்தம் ரோடு, நாகல் நகர் ரவுண்டானா உள்பட பல்வேறு இடங்களில் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
பழமையான கட்டடங்கள் 77 கண்டறியப்பட்டு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் நேற்று 21 கட்டடங்களுக்கு நோட்டீஸ் வழங்கி அதை அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
நகர திட்டமிடுநர் ஜெயக்குமார் கூறுகையில், மதுரையில் நடந்த சம்பவத்தை அசம்பாவிதம் ஏதும் நடக்கா வண்ணம் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள ஆய்வு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆட்கள் இல்லா கட்டிடங்கள், வீடுகளில் நோட்டீஸ் ஒட்டியுள்ளோம்.
மற்ற இடங்களில் இடிக்க சம்மந்தப்பட்டவர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம். 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். இல்லையேல் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.