/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
11 வயதை எட்டிய திண்டுக்கல் மாநகராட்சி
/
11 வயதை எட்டிய திண்டுக்கல் மாநகராட்சி
ADDED : பிப் 19, 2024 05:49 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் 'மாநகராட்சி' அந்தஸ்த்திற்கு வந்து நேற்றுடன் 10 ஆண்டுகளை கடந்து இன்று 11வது ஆண்டில் கால்பதித்துள்ளது. மற்ற மாநகராட்சிகளை போல் வளர்ச்சித்திட்டங்களில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
திண்டுக்கல் என்று சொன்னாலே மக்கள் மனதில் நியாபகத்திற்கு வருவது பூட்டு,பிரியாணி தான். அந்த அளவிற்கு பிரசித்தி பெற்ற இந்த ஊர். 10 ஆண்டுகளுக்கு முன் நகராட்சியாக இருந்தது. அதன்பின் 2014ல் பிப்.19ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை 48 வார்டுகளை கொண்ட மாநகராட்சியாக செயல்படுகிறது. பல மேயர்கள்,பல கமிஷனர்களை கண்ட இந்த மாநகராட்சிக்கு இன்னும் பல தேவைகள் வர வேண்டியுள்ளது. வருடா வருடம் மாநகராட்சிக்கு வயது அதிகமாவதை போல் மக்களின் தேவையும் அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில் இன்று மாநகராட்சி 11வது ஆண்டில் கால்பதிக்கிறது. பலரும் இந்நாளை கொண்டாடுகின்றனர்.
மக்களுக்காக ரோடுகள் விரிவாக்க திட்டம்,குடிநீர் திட்டம் என பல்வேறு திட்டங்களை மாநகராட்சி திண்டுக்கல்லில் அறிமுகம் செய்தபோதிலும் மக்கள் இன்னும் பிரச்னைகளின் பிடியில் தான் சிக்கி தவிக்கின்றனர். வெளி மாவட்ட மக்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்த உடன் முதல் சந்திக்கும் இடம் பஸ் ஸ்டாண்ட் தான் அதுவே இந்த அளவுக்கு மோசமாக உள்ளது. இரவில் பல பகுதிகளில் தெரு விளக்குகள் இல்லாமல் இருள்சூழ்ந்து கிடக்கிறது. ரோட்டோரங்களில் எங்கு பார்த்தாலும் தெரு நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. குப்பையை ரோட்டோரங்களில் கொட்டி எரிக்கும் நிலையும் ஆங்காங்கே நடக்கதான் செய்கிறத. ரோடுகளின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள்,அதிகளவில் இருக்கும் பிளாஸ்டிக் பயன்பாடுகள் என எல்லாமே தாராளமாக உள்ளது.
இந்த வருடமாவது நலத்திட்டங்கள் அதிகமாக செய்து சென்னை,திருச்சி,மதுரை போன்ற மாநகராட்சிகள் போல திண்டுக்கல் மாநகராட்சியும் வருமா என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

