/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் அனுமதியின்றி செயல்படும் காட்டேஜ்கள்; தேவை நடவடிக்கை
/
'கொடை' யில் அனுமதியின்றி செயல்படும் காட்டேஜ்கள்; தேவை நடவடிக்கை
'கொடை' யில் அனுமதியின்றி செயல்படும் காட்டேஜ்கள்; தேவை நடவடிக்கை
'கொடை' யில் அனுமதியின்றி செயல்படும் காட்டேஜ்கள்; தேவை நடவடிக்கை
ADDED : ஏப் 13, 2025 07:11 AM
கொடைக்கானல் : கொடைக்கானலில் அனுமதியின்றி செயல்படும் காட்டேஜ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்வதேச சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். இங்குள்ள சுற்றுலாத்தலம், சீதோஷ்ண நிலையை அனுபவிக்க வருகை தரும் பயணிகளுக்கு தங்கும் விடுதிகள் பெரும் சோதனையாகவே உள்ளது. அரசு விதிமுறைகளின் படி அனுமதியுடன் செயல்படும் விடுதிகள் 200க்கு உள்ளாகவே உள்ளன. ஹோம்ஸ்டே என்ற பெயரில் ஐநுாறுக்கு உட்பட்ட விடுதிகள் மட்டுமே செயல்படுகின்றன.இதையும் தவிர்த்து கொடைக்கானல் மலைப்பகுதி முழுமையும் விடுதிகள் என்ற போர்வையில் அனுமதியின்றி செயல்படும் காட்டேஜ்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவையாக உள்ளன.இவ்வாறு செயல்படும் விடுதிகள் வீட்டு பயன்பாட்டிற்காக அனுமதி பெற்று வணிக நோக்கில் பயன்படுத்தப்படுகிறது. நகராட்சி.ஊரக உள்ளாட்சித் துறை அதிகாரிகள் இதை கண்டுகொள்வதில்லை. இவை ஒரு புறம் இருக்க வணிக நோக்கில் செயல்படும் காட்டேஜ்களுக்கு மின்வாரியம் வீட்டு உபயோக பயன்பாட்டு கட்டணமே பெறுகின்றனர். நகராட்சியும் வீட்டு வரி, குடிநீருக்கான வரிகளையே வசூலிக்கின்றனர். அனுமதி பெற்ற விடுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படும் நிலையில் அனுமதி பெறாத காட்டேஜ்களில் பயணிகள் வருகையை கணக்கில் கொண்டு கட்டண கொள்ளையும் அரங்கேற்றுகின்றன.
ஊட்டியில் தங்கும் விடுதிகள் முறைப்படுத்தப்பட்டதால் கணக்கீடு துல்லியமாக தெரிய வருகிறது. கொடைக்கானலை பொறுத்தமட்டில் இவ்வாறான கணக்கீடு வரன்முறை படுத்தவில்லை. மாறாக இணையதளம் ,அறிவிப்பு பலகை, வழிகாட்டிகள் மூலம் இத்தகைய விடுதிகள் செயல்படும் போக்குள்ளது. இவ்வாறான விடுதிகளில் சமூக விரோத செயல்களும், போதை வஸ்து பயன்பாடு உள்ளிட்ட தகாத செயல்கள் அரங்கேறுவதற்கு அனுமதி இல்லாத விடுதிகள் புகலிடமாக உள்ளது. இவ்வாறான விடுதிகளை அடையாளம் கண்டு வணிக நோக்கில் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

