ADDED : ஜூலை 01, 2026 12:54 AM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி: சின்னாளபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் பிரதீபா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஆனந்தி, செயல் அலுவலர் இளவரசி முன்னிலை வகித்தனர். எழுத்தர் ராமமூர்த்தி அஜன்டா வாசித்தார்.
வளம் மீட்பு பூங்காவில் ரூ.48 லட்சத்தில் பந்தல் அமைத்தல், கழிவுநீர் சேகரிப்பு வாகனத்திற்கு டிரைவர் நியமனம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துப்புரவு மேற்பார்வையாளர்கள் தங்கதுரை, சரளா, சுகாதார அலுவலர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
