ADDED : ஜூலை 01, 2026 12:54 AM
அ நிறம் | அளவு
பழநி: பழநி தீயணைப்பு நிலையம் சார்பில் சின்னகலையம்புத்துார் பழநியாண்டவர் மகளிர் கலைக்கல்லுாரியில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
செஞ்சிலுவை சங்கம், கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகளுக்கு திட, திரவ, எரிவாயு பொருட்கள் தீப்பற்றினால் அணைக்கும் முறைகள், தீ விபத்தில் சிக்குபவரை காப்பாற்றுவது, தீத்தடுப்பு உபகரணங்களை பயன்படுத்துவது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். கல்லுாரி முதல்வர் புவனேஸ்வரி, பேராசிரியர்கள், அலுவலர்கள் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடந்தது.
