/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத அதிகாரிகள் ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர் குமுறல்
/
கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத அதிகாரிகள் ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர் குமுறல்
கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத அதிகாரிகள் ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர் குமுறல்
கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத அதிகாரிகள் ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர் குமுறல்
ADDED : ஜன 06, 2024 06:28 AM
திண்டுக்கல்: ''கவுன்சிலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அதிகாரிகள் அவர்களாகவே ஏதாவது ஒரு பணியை செய்கின்றனர்,'' என ஊராட்சிக்குழு கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கவுன்சிலர் ஜீவாநந்தினி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
திண்டுக்கல் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் ராஜா (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சோபியாராணி (தி.மு.க.,), பி.டி.ஓ.,க்கள் அண்ணாதுரை, சுப்பிரமணியன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள் விவாதம்
ஜீவாநந்தினி (மார்க்சிஸ்ட்): பள்ளப்பட்டி ஊராட்சி பகுதிகளில் பொது மக்களுக்கு குடிநீர் வசதி முறையாக இல்லை. பிஸ்மி நகரில் ரோட்டில் கழிவுநீர் செல்வதால் பள்ளி வாசலுக்கு செல்லும் போது கழிவுநீரில் மிதித்து செல்லும் அவலம் நீடிக்கிறது. பூதமரத்துப்பட்டி நீர்த்தேக்க தொட்டி மராமத்து பணிகள் நடக்காததால் சில பகுதிகளுக்கு தண்ணீர் வராமல் உள்ளது. கவுன்சிலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அதிகாரிகள் அவர்களாகவே ஏதாவது ஒரு பணியை செய்கின்றனர். என் வார்டில் முடிக்கப்படும் பணிகளில் கல்வெட்டுகளில் என் பெயரை போடுவதில்லை.
அண்ணாதுரை (பி.டி.ஓ.,): ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சி பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பணிகள் விபரம் குறித்து கவுன்சிலர்களுக்கு லிஸ்ட் தரப்படும்.
வெங்கடேஷ்,(தி.மு.க.,): காவிரி நீரை ஊராட்சி ஆப்பரேட்டர்களுக்கு வாயிலாக வழங்கினால் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமலிருக்கும்.
பாண்டிசெல்வி (தி.மு.க.,): அறிவுத்திருக்கோயில் அருகே உள்ள ரோடுகள் சேதமாக உள்ளது. மக்கள் டூவீலர்களில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
முத்து,(தி.மு.க.,): அடியனுாத்து சுற்றுப்பகுதி தெரு விளக்குகள் சேதமாக உள்ளது. பொன்னகரம் பகுதியில் காவிரி இணைப்பு இல்லாமல் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது.
செல்வநாயகம் (மார்க்சிஸ்ட்): ஆர்.எம். காலனிய கழிவுநீர் செட்டிநாயக்கன்பட்டி வழியாக செங்குளத்திற்கு வந்து சேருகிறது. இதனால் விவசாய நிலங்கள், நிலத்தடி நீரும் பாதிக்கிறது.
அண்ணாதுரை (பி.டி.ஓ.,): கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.