/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இழுத்தடிக்கப்படும் மாநகராட்சி கூட்டம் பிரச்னைகளோடு தவிக்கும் கவுன்சிலர்கள்
/
இழுத்தடிக்கப்படும் மாநகராட்சி கூட்டம் பிரச்னைகளோடு தவிக்கும் கவுன்சிலர்கள்
இழுத்தடிக்கப்படும் மாநகராட்சி கூட்டம் பிரச்னைகளோடு தவிக்கும் கவுன்சிலர்கள்
இழுத்தடிக்கப்படும் மாநகராட்சி கூட்டம் பிரச்னைகளோடு தவிக்கும் கவுன்சிலர்கள்
ADDED : மே 23, 2025 04:12 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம் கூட்டப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால் மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் கவுன்சிலர்கள் தவித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் பாதாள சாக்கடை பிரச்னை, தெரு நாய் தொல்லை, தெரு விளக்குகள் எரியாதது, ரோடுகள் சேதம் போன்ற பல்வேறு பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் தங்கள் பங்குக்கு பணிகளை மேற்கொண்டாலும் மக்களின் பிரச்னை தொடரத்தான் செய்கிறது. இந்நிலையில் மக்களின் குரல்களை மன்றத்தில் பிரதிபலித்து தீர்வு காணலாம் என்றால் கூட்டத்தை கூட்டாமல் மாநகராட்சி நிர்வாகம் இழுத்தடித்து வருவதாக கவுன்சிலர்கள் கூறுகின்றனர்.கவுன்சிலர்கள் சிலர் கூறுகையில், 'மாநகராட்சி கூட்டம் மாதம் ஒரு முறை நடத்தப்பட வேண்டும். ஏப்ரல் 16ம் தேதி அவசர கூட்டம் என நடத்திவிட்டு மன்ற பொருளுக்கு மட்டும் ஒப்புதல் பெற்று முடித்துவிட்டனர்.
இம்மாதம் முடியப்போகும் நிலையில் இன்னும் கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால் மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண இயலவில்லை. தெருவிளக்குகள், முழுமையாக பொருத்தப்படவில்லை. ஆங்காங்கே பகுதி, பகுதியாக பொருத்தப்பட்டுள்ளது. சாக்கடை, பாதாள சாக்கடை பிரச்னைகள் பெரும் குறைகளாக தொடர்கின்றன.
மாதந்தோறும் கூட்டம் நடத்தினால் தான் நிர்வாகம் குறைகளை சரிசெய்ய முடியும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கடமைக்கு கூட்டம் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் ' என்றனர்.மாநகராட்சி மேயர் இளமதி கூறியதாவது: மாநகராட்சி கூட்டம் உரிய காலத்தில் நடத்தப்படுகிறது. 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் நடத்தப்பட வேண்டும். ஏப்ரல் கடைசியாக கூட்டம் நடத்தப்பட்டது. நிர்வாக பணிகள் காரணமாக இம்மாதம் தாமதம் ஏற்பட்டுள்ளது. கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.