/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பொங்கல் வைத்து பணியை நிறைவு செய்த கவுன்சிலர்கள்
/
பொங்கல் வைத்து பணியை நிறைவு செய்த கவுன்சிலர்கள்
ADDED : ஜன 04, 2025 04:24 AM
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்று ஐந்தாண்டு நிறைவு பெறும் நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக விநாயகர் கோயிலில் ஒன்றிய தலைவர் பரமேஸ்வரி முருகன் தலைமையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
துணைத் தலைவர் முத்து, தி.மு.க., அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து ரூ. 5 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒன்றிய அலுவலக கட்டடத்தை பார்வையிட்ட தலைவர் உள்ளிட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் கட்டட வேலை தொடங்குவதற்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட கல்வெட்டினை புதிய கட்டட வளாகத்தில் நிறுவினர்.