ADDED : ஜூன் 08, 2025 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் 2025 --26ம் ஆண்டிற்கான 13 துறைகளில் உள்ள இளங்கலை பட்டப்படிப்புக்கான மாணவர்களின் சேர்க்கை முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 2ம் தேதி முதல் நடந்து வருகிறது. 5ம் நாளான நேற்று மொழி பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடந்தது.
முதற்கட்ட கலந்தாய்வில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். 9ம் தேதி 2ம் கட்டமாக அறிவியல், 10ம் தேதி மொழி பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.