ADDED : ஜன 13, 2025 04:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம் பகுதியில் இந்த ஆண்டு பரவலாக மழை பெய்ததால் கிணற்று பாசனம்,மானாவரியாக மொச்சை பயிர் சாகுபடிகள் நடந்தது. மணக்காட்டூர், செந்துறை, பிள்ளையார்நத்தம், கோட்டையூர், குடகிபட்டி, சிறுகுடி,சமுத்திராபட்டி, மூங்கில்பட்டி பகுதிகளில் தற்போது வீரிய ரக மொச்சை விளைந்தது.
இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்யும் மொச்சையை நத்தம் மார்க்கெட்டில் உள்ள கமிஷன் கடைகளில் விற்கின்றனர்.
அங்கு கொள்முதல் செய்யும் ரோட்டோர வியாபாரிகள் சில்லரை வியாபாரம் செய்கின்றனர். தற்போது வரத்து அதிகரிக்க துவங்கியது.
உரிக்காத பச்சை மொச்சை சில்லரை விலையாக கிலோ ரூ.100க்கு விற்பனையாகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.