/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தம்பதி தர்ணா... காங்., மீது பா.ஜ., புகார் குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
/
தம்பதி தர்ணா... காங்., மீது பா.ஜ., புகார் குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
தம்பதி தர்ணா... காங்., மீது பா.ஜ., புகார் குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
தம்பதி தர்ணா... காங்., மீது பா.ஜ., புகார் குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
ADDED : டிச 24, 2024 05:07 AM
திண்டுக்கல்: பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக 284 பேர் தங்களது குறைகளை மனுக்கள் வாயிலாக கலெக்டரிடம் முறையிட்ட நிலையில் , குறை தீர் கூட்டத்தில் தம்பதி தர்ணா, காங்., மீது பா.ஜ., புகார் என்பனவும் இடம் பெற்றது.
கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார்.
புதியதாக பதிவு செய்யப்பட்ட ஊத்துப்பாறை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான கேன், பால் அளவை கருவிகள், பால் பரிசோதனை கருவிகள், பதிவேடுகள், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறை சார்பில் பயனாளிக்கு தையல் இயந்திரம் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், தனித்துணை ஆட்சியர் கங்காதேவி, துணை ஆட்சியர் ராஜேஸ்வரிசுவி, ஆவின் பொது மேலாளர் வாணீஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
காங்., இழிவு படுத்தியதாக பா.ஜ., புகார்
பா.ஜ., மாவட்ட பொருளாளர் மணிகண்டன், துணைத் தலைவர் மல்லிகா, பட்டியல் அணி மாவட்டத் தலைவர் இளையராஜா உள்ளிட்டோர் அளித்த மனுவில், அம்பேத்கருக்கு காங்., கட்சி செய்த துரோகங்களை பட்டியலிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற விவதாத்தின்போது குறிப்பிட்டார்.
இதனைப் பொருத்துக் கொள்ள முடியாத இண்டி கூட்டணிக் கட்சியினர் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி காங்., சார்பில் திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது அக்கட்சியின் பட்டியலின சமூதாயத்தைச் சார்ந்த ஒருவருக்கு அமைச்சர் அமித்ஷாவின் முகமூடி அணிவித்து, காலணி மாலை , உருவபொம்மையை தாக்குதவது போல் சித்தரித்து இழிவுப்படுத்தினர்.
குறிப்பாக அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை தேர்ந்தெடுத்து இவ்வாறு செய்துள்ளனர். அந்த உருவபொம்மையை தீவைத்து கொளுத்தியும் அவதுாறான முழக்கங்களை எழுப்பினர்.
இதனை போலீசார் தடுக்க முயற்சிக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
உள்துறை அமைச்சரை இழிப்படுத்த வேண்டும் என்ற ஓரே நோக்கத்தில் செயல்பட்ட காங்.,கட்சியினர் மீதும், தடுக்கத் தவறிய போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தனர்.
ஜல்லிக்கட்டு பேரமைப்பினர் மனு:
ஜல்லிக்கட்டில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் மனு அளிக்கப்பட்டது
தம்பதி தர்ணா
ஒட்டன்சத்திரம் கொல்லப்பட்டியை சேர்ந்த் சவரத்தொழிலாளி பெருமாள் 67, அவரது மனைவி தனலட்சுமியுடன் 60, கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.
பின்னர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்களுக்கு சொந்தமான நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்துவிட்டனர். அந்த ஆவணங்களை ரத்து செய்து நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.