/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நீதிமன்ற வழக்கு எதிரொலி மணல் ஆலைகளில் ஆய்வு
/
நீதிமன்ற வழக்கு எதிரொலி மணல் ஆலைகளில் ஆய்வு
ADDED : ஜன 13, 2024 04:38 AM
வடமதுரை : உயர் நீதிமன்ற வழக்கு எதிரொலியாக வடமதுரை பகுதியில் சட்டவிரோதமாக மணல் தயாரிக்கும் ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வடமதுரை ஒன்றியத்தில் தென்னம்பட்டி, பெரும்புள்ளி, தும்மலக்குண்டு, அய்யலுார் என பல இடங்களில் அரசு, தனியார் நிலங்களில் மண்ணை நீரால் கழுவி செயற்கை மணல் தயாரிக்கும் தொழிற்சாலைகளை பலர் உரிய அனுமதியின்றி நடத்தி வருகின்றனர். இந்த மணல் ஆலைகள் மீது நடவடிக்கை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்வதற்காக இவ்விடங்களில் வேடசந்துார் தாசில்தார் விஜயலட்சுமி, கனிம வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன், மாசு கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர் திவ்யா, மண்டல துணை தாசில்தார் ராஜேந்திரன், ஏ.பி.டி.ஓ., ஏழுமலையான் உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. பெரும்பகுதி பகுதிகளில் மணல் தயாரிப்பு உபகரணங்கள் அகற்றப்பட்டிருந்தன. அதிகாரிகள் கூறுகையில், 'தற்போதைய நிலை குறித்து அறிக்கையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்' என்றனர்.