/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் ஆக்கிரமிப்பு அகற்றம் நீதிமன்ற கண்காணிப்பு குழு ஆய்வு
/
பழநியில் ஆக்கிரமிப்பு அகற்றம் நீதிமன்ற கண்காணிப்பு குழு ஆய்வு
பழநியில் ஆக்கிரமிப்பு அகற்றம் நீதிமன்ற கண்காணிப்பு குழு ஆய்வு
பழநியில் ஆக்கிரமிப்பு அகற்றம் நீதிமன்ற கண்காணிப்பு குழு ஆய்வு
ADDED : மார் 17, 2024 07:48 AM

பழநி, : பழநியில் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை மூலம் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
பழநி முருகன் கோயில் அடிவாரம் கிரி வீதியில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்த கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினரும் அவ்வப்போது ஆய்வு செய்து அறிக்கை அளித்து வருகின்றனர்.
அதன்படி நேற்று கண்காணிப்பு குழு தலைவரான ஓய்வு நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழுவினர் பழநி கிரி வீதி பகுதிகளில் ஆய்வு செய்தார். அதன்பின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது.
இதோடு அடிவாரம் பகுதி பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தனர்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என குழுவினர் தெரிவித்தனர். இதில் திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி, எஸ்.பி., பிரதீப், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து கலந்து கொண்டனர்.