/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பொருட்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்

ADDED : ஆக 26, 2025 04:16 AM
பழநி: நீதிமன்ற உத்தரவுப்படி பழநி ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யவந்த ஊழியர்கள் அதிகாரிகள் இல்லாததால் திரும்பினர்.
ஒட்டன்சத்திரம் இடையகோட்டையை சேர்ந்த கோகுலகுமார், ஆனந்த் சிவசுப்பிரமணியம் குடும்பத்தினர் 55 ஏக்கர் நிலம் நான்காஞ்சிஆறு அணை திட்டத்திற்கு எடுக்கப்பட்டது.
இதற்கான இழப்பீடு தொகை முழுமையாக வழங்க வில்லை . இது குறித்த வழக்கு பழநி நீதிமன்றத்தில் நடைபெற்றது. 2006 ல் ரூ.59 லட்சத்து 79 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது. வழங்காததால் பழநி ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் உள்ள பொருட்கள்,வாகனத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்த நீதிமன்ற ஊழியர்கள், அதிகாரிகள் இல்லாத நிலையில் திரும்பினர்.