/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மிச்சரில் மறைத்து புகையிலை விற்பனை: 15 கடைகளுக்கு சீல்
/
மிச்சரில் மறைத்து புகையிலை விற்பனை: 15 கடைகளுக்கு சீல்
மிச்சரில் மறைத்து புகையிலை விற்பனை: 15 கடைகளுக்கு சீல்
மிச்சரில் மறைத்து புகையிலை விற்பனை: 15 கடைகளுக்கு சீல்
ADDED : பிப் 03, 2024 04:59 AM

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மிச்சருக்குள் மறைத்து வைத்து தடை புகையிலை பதுக்கி விற்பனை செய்த 15 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்து ரூ.3.50 லட்சம் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல் நகர்,புறநகர் பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி, அலுவலர்கள் செல்வம்,ஜோதிமணி, கண்ணன், சரவணக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வேடசந்துார் பகுதி கடையில் மிச்சர் போன்ற உணவு பொருட்களில் 100க்கு மேலான தடை புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டனர். இந்த கடை உட்பட மாவட்டத்தில் 15 கடைகளுக்கு சீல் வைத்து ரூ.3.50 லட்சம் அபராதம் விதித்தனர்.