/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தனியார் பள்ளிகளில் போட்டி நடத்த சி.பி.எம்.எல்., எதிர்ப்பு
/
தனியார் பள்ளிகளில் போட்டி நடத்த சி.பி.எம்.எல்., எதிர்ப்பு
தனியார் பள்ளிகளில் போட்டி நடத்த சி.பி.எம்.எல்., எதிர்ப்பு
தனியார் பள்ளிகளில் போட்டி நடத்த சி.பி.எம்.எல்., எதிர்ப்பு
ADDED : ஜூலை 06, 2025 03:56 AM
திண்டுக்கல்: .பி.எம்.எல்., நிலைக்குழு உறுப்பினர் ரவி அறிக்கை: பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு நாளை யொட்டி மாவட்ட பேச்சு, கட்டுரை போட்டி நடைபெறும் என கலெக்டர் சரவணன் அறிவித்துள்ளார்.
இதை வரவேற்கிறோம். ஆனால் இந்தப்போட்டிகளை நடத்த மாவட்டத்தில் தகுதியான அரசுப்பள்ளிகளே இல்லையா . மாவட்ட நிர்வாகத்தின் இந்தபோக்கு அரசு பள்ளிகளை தரம் குறைத்தும் தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கவும் செய்கிறது. கலெக்டர் தனது அறிவிப்பை திரும்பப்பெற்று ஏதாவது ஒரு அரசு பள்ளியில் போட்டிகளை நடத்த வேண்டும். இது போல் அரசு அனைத்து நிகழ்ச்சிகளும் அரசு கட்டடங்களிலே நடத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டும் என கேட்டுள்ளார்.