/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் லீக் : ஏ.எம்., சிசி அணி வெற்றி
/
கிரிக்கெட் லீக் : ஏ.எம்., சிசி அணி வெற்றி
ADDED : மே 08, 2025 03:44 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் ஏ.எம்., சிசி அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன், பிரஸித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன் போட்டிகள் என்.பி.ஆர்., பி.எஸ்.என்.ஏ., ஆர்.வி.எஸ்., என்.பி.ஆர்., ரிச்மேன் மைதானங்களில் நடந்தது.
திண்டுக்கல் ஆரஞ்ச் சிசி அணி 50 ஓவர்களில் 294/4. தனபால் 63, ப்ரஜன் 44, பிரதீஷ்குமார் 4 விக்கெட். சேசிங் செய்த பழநி யுவராஜ் யங்ஸ்டர்ஸ் சிசி அணி 37.2 ஓவர்களில் 169 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது.
மகேஸ்வரன் 50, ஜேகப் 33, பனுவலாட்டி 3 விக்கெட். திண்டுக்கல் ப்ளே பாய்ஸ் சிசி அணி முதலில் பேட்டிங் செய்து 48 ஓவர்களில் 197/9. ரோஷன் 42, ஹரிஹரன் 37(நாட்அவுட்), சக்திவேல் 4 விக்கெட். சேசிங் செய்த காந்திகிராம அணி 37.3 ஓவர்களில் 162 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. விவேகானந்தர் 49, மோகன் 35, விஸ்வஹரிணி, சத்யமூர்த்தி தலா 3 விக்கெட்.
திண்டுக்கல் ஆரஞ்ச் சிசி அணி 45.1 ஓவர்களில் 184 க்கு ஆல்அவுட் ஆனது. தனபால் 59, தேவேந்திரகுமார் 29, ராஜபாண்டி 3 விக்கெட்.
சேசிங் செய்த ஏ.எம்., சிசி அணி 31.1 ஓவர்களில் 187/5 எடுத்து வென்றது. க்ஷகாளீஸ்வரன் 97, சசிகுமார் 31.
திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் ஜூனியர்ஸ் சிசி அணி 50 ஓவர்களில் 332/9. ஷர்வின் 141, ஜெயந்த் 78. சேசிங் செய்த பழநி டாமினேட்டர்ஸ் சிசி அணி 46.4 ஓவர்களில் 187 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. விக்னேஷ் 67, சபரிநாதன் 43, மகேஸ்வரன் 4 விக்கெட்.
திண்டுக்கல் வெற்றி சிசி அணி 24.5 ஓவர்களில் 180 க்கு ஆல்அவுட் ஆனது. ஆரோமின்ராஜ் 44, கார்த்திக்குமார் 35, வேல்முருகன் 4 விக்கெட்.
சேசிங் செய்த அய்யலுார் க்ளாசிக் சிசி அணி 23.4 ஓவர்களில் 181/7 எடுத்து வென்றது. கவுதம் 57, நிக்சன், கார்த்திகேயன் தலா 35.
திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் லெவன் அணி 25 ஓவர்களில் 92/9. சின்னையா 5 விக்கெட். சேசிங் செய்த நத்தம் என்.பி.ஆர்., குழுமம் அணி 20.2 ஓவர்களில் 96/7 எடுத்து வென்றது. பாண்டியராஜன், கார்த்திக் தலா 3 விக்கெட்.
சாமியார் தோட்டம் அணி 24.2 ஓவர்களில் 112 க்கு ஆலஅவுட் ஆனது. ராபின்சன் 39, வேல்முருகன் 3 விக்கெட். சேசிங் செய்த வல்கனோ ரைடர்ஸ் அணி 21.5 ஓவர்களில் 113/9 எடுத்து வென்றது.