/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் லீக்: எக்ஸ்பிரஸ் அணி வெற்றி
/
கிரிக்கெட் லீக்: எக்ஸ்பிரஸ் அணி வெற்றி
ADDED : அக் 24, 2025 02:39 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் -டி.டி.சி.ஏ., கிரிக்கெட் லீக் போட்டியில் எக்ஸ்பிரஸ் அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிசன் போட்டிகள் திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ரிச்மேன் மைதானங்களில் நடந்தது. ஒட்டன்சத்திரம் நைக் சிசி அணி 34.5 ஓவர்களில் 124 ல் ஆல் அவுட் ஆனது. மகேந்திரன் 28, லக்ஷ்மிநாராயணன் 6. சேசிங் செய்தி திண்டுக்கல் ஏ.எம்., சிசி அணி 14.4 ஓவர்களில் 126/2 எடுத்து வென்றது. தாமரை செல்வன் 74, லட்சுமி நாராயணன் 37 (நாட்அவுட்). திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் லெவன் அணி 25 ஓவர்களில் 134/6. தினேஷ்குமார் 51, செல்வகுமரன் 27(நாட்அவுட்). சேசிங் செய்த வேடசந்துார் சீனிபாலா சிசி அணி 23.3 ஓவர்களில் 111 க்கு ஆல்அவுட் ஆனது. பாஸ்கரன் 40, பார்த்திபன், இம்ராம்ஷா தலா 4 விக்கெட். திண்டுக்கல் சாமியார்தோட்டம் சிசி அணி 25 ஓவர்களில் 139/7. ரமேஷ்குமார் 35, எட்வின்அரசன் 28. சேசிங் செய்த அய்யலுார் கிளாசிக் சிசி அணி 25 ஓவர்களில் 126/7 எடுத்து தோற்றது. மணிகண்டன் 28, ரமேஷ்குமார் 3 விக்கெட எடுத்தனர்.

