/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் லீக்:பழநி யுவராஜ் யங்ஸ்டர்ஸ் அணி வெற்றி
/
கிரிக்கெட் லீக்:பழநி யுவராஜ் யங்ஸ்டர்ஸ் அணி வெற்றி
கிரிக்கெட் லீக்:பழநி யுவராஜ் யங்ஸ்டர்ஸ் அணி வெற்றி
கிரிக்கெட் லீக்:பழநி யுவராஜ் யங்ஸ்டர்ஸ் அணி வெற்றி
ADDED : அக் 07, 2024 05:40 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் பழநி யுவராஜ் யங்ஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல் டிராகன் கோப்பைக்கான முதல் முதல் டிவிசன் லீக் போட்டியில் பழநி யுவராஜ் யங்ஸ்டர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் திண்டுக்கல் ஏ.எம்., கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. பி.எஸ்.என்.ஏ., மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பழநி யுவராஜ் யங்ஸ்டர்ஸ் சிசி அணி 34.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் எடுத்தது. ராஜதுரை 38,ராஜ்பாண்டி 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். சேசிங் செய்த ஏ.எம்., சிசி அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 72 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. சுதீஸ்(முன்னாள் ரஞ்சிக் கோப்பை வீரர்) 8 விக்கெட்டுகள் எடுத்தார். பிரஸித்தி வித்யோதயா கோப்பைக்கான 2 வது டிவிசன் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 17.4 ஓவர்களில் 84 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. விஜய் 6 விக்கெட்டுகள் எடுத்தார். சேசிங் செய்த திண்டுக்கல் சாமியார்புரம் கிரிக்கெட் கிளப் 17.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 85 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிரபாகரன் 36 (நாட்அவுட்) கபின் சூர்யா 3 விக்கெட்டுகள் எடுத்தார். மற்றொரு போட்டியில் திண்டுக்கல் ஆதித் கிரிக்கெட் கிளப் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தது. சுதிர் 36 ரன்களும், வேல்முருகன், கவுதம் ஆகியோர் தலா 3 விக்கெட்டும் எடுத்தனர். சேசிங் செய்த அய்யலுார் கிளாசிக் கிரிக்கெட் கிளப் அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 115 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. ஞானபிரகாஷ் 42 ரன்களும், கோபிநாத் 4 விக்கெட்டும் எடுத்தார். ஹோட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான 3வது டிவிசன் லீக் போட்டியில் திண்டுக்கல் பாரத் கிரிக்கெட் கிளப் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. வினோத் 46, நிரஞ்சன் 37 ரன்களும், நவீன்குமார் 4 விக்கெட்டும் எடுத்தனர். சேசிங் செய்த எரியோடு ஸ்கில் கிரிக்கெட் கிளப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் பறிகொடுத்து 94 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவியது. புனிதன் 3 விக்கெட் எடுத்தார். மற்றொரு போட்டியில் திண்டுக்கல் சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி முதலில் பேட்டிங் செய்து 25 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. விக்னேஸ்வரன் 63, குமரவேல் 35 ரன்களும், சம்பத்குமார் 3 விக்கெட்டும் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் கோல்சன் கிரிக்கெட் கிளப் அணி 22.1 ஓவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது. சரவண பாண்டியன் 32, வெங்கடேசன் 30 ரன்களும், பாரதிதான், குமரவேல், யுவராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டும் எடுத்தனர்.
........................................