sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கிரிக்கெட் லீக்; கொடை ராயல் சி.சி.அணி வெற்றி

/

கிரிக்கெட் லீக்; கொடை ராயல் சி.சி.அணி வெற்றி

கிரிக்கெட் லீக்; கொடை ராயல் சி.சி.அணி வெற்றி

கிரிக்கெட் லீக்; கொடை ராயல் சி.சி.அணி வெற்றி


ADDED : பிப் 15, 2024 06:01 AM

Google News

ADDED : பிப் 15, 2024 06:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் கொடைக்கானல் பவான்ஸ் பள்ளியில் நடந்த பவான்ஸ் கோப்பைக்கான கிரிக்கெட் லீக் போட்டியில் கொடைக்கானல் ராயல் சி.சி.அணி வெற்றி பெற்றது. கொடைக்கானல் ராயல் சி.சி.அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழந்து 218ரன்கள் எடுத்தது. பிரதீப் 97ரன்கள் எடுத்தார். சேசிங் செய்த கொடைக்கானல்குருசடி மெத்து சி.சி., அணி 15.4 ஓவரில் 95 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. இனிகோராஜ் 35ரன்கள், யுவராஜா 3 விக்கெட் எடுத்தனர். கொடைக்கானல் லேக் பிரண்ட்ஸ் சி.சி., அணி 20 ஓவரில் 101 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது ரெனால்ட் பிரான்சிஸ் 66ரன்கள், சின்னசாமி 5 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த கொடைக்கானல் யூத் லெவன் சி.சி. அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழந்து 94ரன்கள் மட்டுமே எடுத்தது. சண்முகம் ஜோன்ஸ் 3 விக்கெட் எடுத்தார். கொடைக்கானல் ரைனோஸ் சி.சி. அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழந்து 133ரன்கள் எடுத்தது. நாகராஜ் 50, மணிமாறன் 63ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த கொடைக்கானல் ராயல் சி.சி. அணி 13.3 ஓவரில் 4 விக்கெட் இழந்து 136ரன்கள் எடுத்து வென்றது. யுவராஜா 31, பிரதீப் 41 (நாட்அவுட்)ரன்கள், மணிகண்டன் 3 விக்கெட் எடுத்தனர்..

கொடைக்கானல் பால்கன்ஸ் சி.சி. அணி 20 ஓவரில் 90 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. கிருஷ்ணா விஜய் 36ரன்கள், கார்த்திக் பாபு 3 விக்கெட் எடுத்தனர்.

சேசிங் செய்த கொடைக்கானல் யூத் லெவன் சி.சி. அணி 9 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 95ரன்கள் எடுத்து வென்றது. கோகுல் 36, சின்னசாமி 40 ரன்கள் எடுத்தனர்.






      Dinamalar
      Follow us