/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் லீக்: கொடை யங்ஸ்டர்ஸ் அணி வெற்றி
/
கிரிக்கெட் லீக்: கொடை யங்ஸ்டர்ஸ் அணி வெற்றி
ADDED : பிப் 24, 2024 04:53 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் கொடைக்கானல் பவான்ஸ் பள்ளியில் நடத்திய பவான்ஸ் கோப்பையின் கொடைக்கானல் அணிகளுக்கான போட்டியில் யங்ஸ்டர்ஸ் சி.சி.அணி வெற்றி பெற்றது.
காந்தி வித்யாஷ்ரம் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 122ரன்கள் எடுத்தது. சேசிங் செய்த யூத் லெவன் சி.சி. அணி 10 ஓவரில் 50ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. ஹரிபிரசாத், அருள் தலா 3 விக்கெட் எடுத்தனர். குருசடி மெத்து சி.சி. அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழந்து 189ரன்கள் எடுத்தது. மணிகண்டன் 86, சுரேஷ் 34ரன்கள் எடுத்தனர்.
சேசிங் செய்த செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி அணி 10.5 ஓவரில் 37 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. யங்ஸ்டர்ஸ் சி.சி. அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 169ரன்கள் எடுத்தது. நிதிஷ் ராஜ்குமார் 32, வியர்ஜெகன் 50, காமாட்சிராஜா 40ரன்கள் எடுத்தனர்.
சேசிங் செய்த செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி அணி 18.3 ஓவரில் 81ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. அருண்குமார் 3 விக்கெட் எடுத்தார். பவன்ஸ் காந்தி வித்யாஷ்ரம் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 101ரன்கள் எடுத்தது.
சேசிங் செய்த பிளாக் மாம்பாஸ் சி.சி.அணி 17.1 ஓவரில் 9 விக்கெட் இழந்து 105ரன்கள் எடுத்து வென்றது. முரளி40 (நாட்அவுட்) ரன்கள், ஹரிஹரன் 5, அருள் 3 விக்கெட் எடுத்தனர். லயன்ஸ் சி.சி. அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழந்து 133ரன்கள் எடுத்தது. மைக்கேல் டேவிட் 37, பீட்டர் பாலாஜி 49, சூர்யா 30 ரன்கள் எடுத்தனர்.
சேசிங் செய்த யங்ஸ்டர்ஸ் சி.சி. அணி 10.2 ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 137ரன்கள் எடுத்து வென்றது. அருண்குமார் 96(நாட்அவுட்)ரன்கள் எடுத்தார்.
பிளாக் மாம்பாஸ் சி.சி. அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 121ரன்கள் எடுத்தது. பாண்டி 66(நாட்அவுட்)ரன்கள், கபில்தேவ் 3 விக்கெட் எடுத்தனர்.
சேசிங் செய்த யூத் லெவன் சி.சி.அணி 19.3 ஓவரில் 5 விக்கெட் இழந்து 125ரன்கள் எடுத்து வென்றது. பவன் காந்தி வித்யாஷ்ரம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 99ரன்கள் எடுத்தது.
ஜெகதீஷ் 38ரன்கள், கிருஷ்ணவிஜய் 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த பால்கன்ஸ் சி.சி. அணி 17.2 ஓவரில் 7 விக்கெட் இழந்து 100ரன்கள் எடுத்து வென்றது. ஹரிஹரன் 3 விக்கெட் எடுத்தார்.