/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் லீக்: ஸ்ரீமதி கோப்பை வென்றது மெஜஸ்டிக் அணி
/
கிரிக்கெட் லீக்: ஸ்ரீமதி கோப்பை வென்றது மெஜஸ்டிக் அணி
கிரிக்கெட் லீக்: ஸ்ரீமதி கோப்பை வென்றது மெஜஸ்டிக் அணி
கிரிக்கெட் லீக்: ஸ்ரீமதி கோப்பை வென்றது மெஜஸ்டிக் அணி
ADDED : ஜன 15, 2024 11:27 PM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், சின்னாளபட்டி சண்முகம் அறுவை சிகிச்சை, கருத்தரிப்பு மருத்துவமனை சார்பில் நடந்த ஸ்ரீமதி கோப்பை 16 வயது கிரிக்கெட் லீக் ஸ்ரீமதி கோப்பைக்கான போட்டியில்மெஜஸ்டிக் அணி வெற்றி பெற்றது.
என்.பி.ஆர். மேட்டிங் மைதானத்தில் நடந்த போட்டியில் திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா அணி 50 ஓவரில் 5விக்கெட் இழந்து 333ரன்கள் எடுத்தது. முகமது பஹீம் 134, தஷ்வின் 128 (நாட்அவுட்)ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த வடமதுரை மாஸ்டர்ஸ் சி.சி.அணி 31.4 ஓவரில் 94 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. சுஜித்30ரன்கள், தனிஷ் 4 விக்கெட் எடுத்தனர்.
திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழந்து 409ரன்கள் எடுத்தது. தீபன் 120,சஞ்சய் பாலாஜி 90, சசிந்தர் - 76, சந்தோஷ் 30 (நாட்அவுட்)ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த ஒட்டன்சத்திரம்ஸ்ரீகிருஷ்ணா எம்.ஹெச்.எஸ்.எஸ். அணி 30.4 ஓவரில் 60 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. ஷர்வின் 5விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
திண்டுக்கல் ஆர்.வி.எஸ். மைதானத்தில் நடந்த போட்டியில் வத்தலக்குண்டு ஜெயசீலன் மேம்
எம்.ஹெச்.எஸ்.எஸ்.அணி 49.1 ஓவரில் 147 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. சந்தோஷ் 31ரன்கள், சிபிதர்ஷன்3விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் மெஜஸ்டிக் சி.சி.அணி 42 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 148ரன்கள் எடுத்து வென்றது. கோபிநாத் பாண்டி 41 (நாட்அவுட்), முத்துராமன் 61(நாட்அவுட்) ரன்கள் எடுத்தனர்.
ஸ்ரீ.வி.மைதானத்தில் நடந்த வத்தலக்குண்டு ஜெயசீலன் மெமோரியல் எம்.எச்.எஸ்.எஸ், அணி 35.2 ஓவரில் 68 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. முகமது பஹீம் 3 விக்கெட் கைப்பற்றினார். சேசிங் செய்த திண்டுக்கல் பிரசித்திவித்யோதயா அணி 22.4 ஓவரில் 4 விக்கெட் இழந்து 69ரன்கள் எடுத்து வென்றது. தஷ்வின் 28ரன்கள் எடுத்தார். பி.எஸ்.என்.ஏ. மைதானத்தில் நடந்த ஒட்டன்சத்திரம். ஸ்ரீ கிருஷ்ணா எம்.ஹெச்.எஸ்.எஸ். சி.பி.எஸ்.சி., அணி 39.4
ஓவரில் 102 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. அகில் 27ரன்கள், மலையாளசாமி 4, புகழ் 3விக்கெட் எடுத்தனர்.சேசிங் செய்த பழநியுவராஜ் எஸ்.வி.எம். அகாடமி அணி 19.5 ஓவரில் 3 விக்கெட் இழந்து 106 ரன்கள் எடுத்துவென்றது. பஷீர் ரகுமான் 54ரன்கள் எடுத்தார்ஆர்.வி.எஸ். மைதானத்தில் நடந்த போட்டியில் வடமதுரை மாஸ்டர்ஸ் சி.சி.அணி 49 ஓவர்களில் 170 ரன்கள்எடுத்து ஆல்அவுட்டானது.
யுவன் சங்கர் 51, முனீஸ்வரன் 28(நாட் அவுட்)ரன்கள் எடுத்தனர்.சேசிங் செய்ததிண்டுக்கல் ஆரஞ்சு கிரிக்கெட் அகாடமி அணி 30.2 ஓவரில் 3 விக்கெட் இழந்து 171ரன்கள் எடுத்து வென்றது. ராஜன்29, சசிக்குமார் 48, நிதர்ஷின் 40(நாட்அவுட்)ரன்கள் எடுத்தனர்.