/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் லீக் போட்டி : ப்ளே பாய்ஸ் அணி வெற்றி
/
கிரிக்கெட் லீக் போட்டி : ப்ளே பாய்ஸ் அணி வெற்றி
ADDED : நவ 04, 2024 07:12 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் ப்ளே பாய்ஸ் கிரிக்கெட் கிளப் அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிசன் போட்டி ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஒட்டன்சத்திரம் நைக் கிரிக்கெட் கிளப் அணி 30.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 101 ரன்கள் எடுத்தது. எவரெஸ்ட் 4 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த திண்டுக்கல் ப்ளே பாய்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 24.3 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 102 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சசிகுமார் 25, சரவண ஆதித்தன் 30 ரன்களும், கார்த்திகேயன் 6 விக்கெட்டும் எடுத்தார். பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி மைதானத்தில் நடந்த பிரஸித்தி வித்யோதயா கோப்பைக்கான 2 வது டிவிசன் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் லெவன் அணி 25 ஓவர்களில் 177 ரன்களில் ஆல் ஆவுட் ஆனது. அருண் பிரகாஷ் ராஜ் 60 ரன்கள், அகமது 5 விக்கெட்டும் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த திண்டுக்கல் மன்சூர் யங்ஸ்டர்ஸ் சிசி 8 விக்கெட் இழப்பிற்கு 25 ஓவர்களில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
தினேஷ்குமார் 44 ரன்கள், மிலன் ஆகாஷ் 3 விக்கெட்டும் எடுத்தார். அதே மைதானத்தில் நடந்த பிரஸித்தி வித்யோதயா கோப்பைக்கான 2 வது டிவிசன் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாப்பம்பட்டி எய்ம்ஸ்டார் சிசி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் சேர்த்தது. உதயகுமார் 94, ராஜ்குமார் 43 ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து சேசிங் செய்த அய்யலுார் கிளாசிக் சிசி அணி 17.5 ஓவர்களில் 109 ரன்களில் ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது. கவின்ராஜ் 35 (நாட்அவுட்), அருண்பாண்டியன் 3, ஐயப்பன் 4 என விக்கெட் எடுத்தனர். ரிச்மேன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பிரஸித்தி வித்யோதயா கோப்பைக்கான 2 வது டிவிசன் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொடைரோடு கொடை சிசி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 65 ரன்கள் எடுத்தது.
லோகேஸ்வரன் 4, காளிதாஸ் 3 விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து சேசிங் செய்த வேடசந்துார் ஜாஹிர் அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 69 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதே மைதானத்தில் நடந்த பிரஸித்தி மது ஸ்கேன்ஸ் அண்ட் ஸ்பெஷாலிட்டி லேப் கோப்பைக்கான 4 வது டிவிசன் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் ஆல் ரவுண்டர்ஸ் சிசி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 115 ரன்கள் எடுத்தது. பிரசாந்த் 51 ரன்களும், முகமது யாசின் 5 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த திண்டுக்கல் ஸ்கை சிசி 17.5 ஓவர்களில் 71 ரன்களில் ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது. திருப்பதி 4 விக்கெட் எடுத்தார்.